திங்கள், 12 ஏப்ரல், 2010
ஞாயிறு தினக்குரலில் கிருத்தியம் - யாழ்தேவி திரட்டிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!
இலங்கையில் வெளியாகும் பாரிய வாசகர் வட்டத்தைக் கொண்ட 'தினக்குரல்' யாழ்தேவியுடன் கைகோர்க்க முன்வந்துள்ளது. இனி ஒவ்வொரு ஞாயிறு தினக்குரலிலும் யாழ்தேவிக்கான பக்கத்தில் எங்கள் பதிவர்களின் பதிவுகள் மின்னப்போகின்றன.
இந்தச் செய்திக்கமைவாக - நேற்றைய(11.04.2010) தினக்குரல் வாரவெளியீட்டில் இந்த வார நட்சத்திரமாக எனது கிருத்தியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தினக்குரலுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன் என்னை தமது திரட்டியில் (07.09.2009) நட்சத்திரப் பதிவராக்கிய யாழ்தேவியினருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்! குறிப்பாக யாழ்தேவியின் மருதமூரான் அவர்களுக்கும் - சேரன் அவர்களுக்கும் எனது மறவாத அன்பான நன்றிகள்!
பதிவர் எம்: கே. முருகானந்தன் அவர்களின் மறந்து போகாத சில தளத்தில் 2009 மார்ச் 16ஆந் திகதி யாழ்தேவி பயணம் - ரயிலில் அல்ல என்ற பதிவுக்கு நான் இட்ட கருத்துரை -
உண்மைதான் . நான் எனக்கு யாழ்தேவி இணையம் நட்சத்திரப் பதிவராக ஏற்ற அந்தவாரத்தில் இட்ட ஒரு இடுகை யாழ்தேவி ரயிலைப் பற்றியது - என் வாழ்க்கையில் யாழ்தேவி!
பல நாட்களுக்குப் பின் அந்த இனிமையான அனுபவங்களை மீட்டமைக்கு நன்றிகள். அதில் ஒரு குறிப்பிடப்படாத விடயம் உங்களுடைய வீடியோவில் பார்த்தபிறகுதான் நினைவுக்கு வந்தது!
அனுராதபுரத்திலும் யாழ்ப்பாணத்திலும் நிலத்தின் கீழ் ஒவ்வொரு மேடைகளுக்கும் போகும் வசதியிருந்தது. கொழும்பில் படிகளில் ஏறித்தான் செல்லவேண்டும்.
மற்றது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும்போது மதவாச்சி தாண்டி அனுராதபுரத்தை அண்மிக்கும்போது இங்கே நாம் புராதனச் சின்னங்களைப் பார்க்கமுடியும். நானும் 1977க்குப்பின் அனுராதபுரத்தைப் பார்க்க 13 வருடங்கள் ரயிலில் செல்லும்போது அந்த புகையிரத நிலையத்தில் இறங்கி ஒருதடவை எனது காலை வைத்து விளையாடுவது ஞாபகம். ரயில் சேவை யாழ்ப்பாணத்திற்கு இல்லாமல்போனதன்பின் வவுனியா வரை ரயிலில் செல்லும்போது அதிகாலையில் புகையிரதம் அனுராதபுரத்தில் நெடுநேரம் தரித்துநிற்கும் - அப்போதெல்லாம் இறங்கி அங்கு உலாவுவதும் ஓரளவு சிங்களம் தெரிந்ததால் சிலருடன் அளவளாவுவதும் மறக்க முடியாத நிகழ்வுகளே! அருமையான கட்டுரை - வாழ்த்துக்கள்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)